பூப்பறிக்க சென்ற பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த விபரீதம் ; மாயமான மர்ம நபர்கள்
போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவரை உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இருவரால், பக்கவாட்டுத் துப்பாக்கியால் தாக்கப்பட்டதாக தலங்கம காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் தாக்கப்பட்ட அதிகாரி ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை
தலங்கம பாடசாலை வீதியைச் சேர்ந்த குறித்த அதிகாரி, தனது வீட்டிற்கு அருகில் வீதியில் உள்ள ஒரு பூ மரத்தில் பூக்களை பறித்துக் கொண்டிருந்தபோது, உந்தருளியில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் உந்துருளியில் இருந்து இறங்கி, "என்ன பார்க்கிறீர்கள்?" என கேட்டதாகவும், பின்னர் அவரை தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த அதிகாரி தாக்கப்பட்டவுடன் கீழே விழுந்ததாகவும், உந்துருளின் இலக்கத்தை கவனிக்கவில்லை எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் சிசிரிவி காணொளி ஆய்வு செய்யப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.