தென்னிலங்கையை உலுக்கும் கொலை சம்பவங்கள்; மற்றுமொரு பெண் கொலை
கொழும்பு மொரட்டுவை பிரதேசத்தில் பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பெண் கொலை சந்தேக நபர் மொரட்டுமுல்ல பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பெண்ணின் கணவர் சிறையில் உயிரிழப்பு
அதேவேளை உயிரிழந்த பெண்ணின் கணவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த கணவரின் உறவினர் ஒருவரால் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அதேவேளை கடந்த வாரம் சீதுவ பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் கலி செய்யப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.