மருந்து குடிக்க வற்புறுத்திய தந்தை கோடரியால் வெட்டி படுகொலை
தனது மகனுக்கு மருந்து குடிக்க வற்புறுத்திய தந்தையை கோடரியால் வெட்டி படுகொலை செய்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனநலம் குன்றிய மகனுக்கு மருத்து குடிக்க வற்ற்புறுத்தியதால் இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்ற தாக பொலிஸார் கூறுகின்றனர்.
சம்பவத்தில் பிடிகல, களுஆராச்சிகொட பகுதியைச் சேர்ந்த பியதாச ஜயசிங்க என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் 47 வயதுடைய மகனை பிடிகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மனநல வைத்தியசாலையில் நீண்டகாலமாக சிகிச்சை
உயிரிழந்தவரின் மகன் அங்கொட மனநல வைத்தியசாலையில் நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் நீதிமன்ற அனுமதியின் பேரில் குறித்த நபரை பெற்றோரிடம் ஒப்படைத்த வைத்தியர்கள் அவருக்கு தினந்தோறும் மருந்து வழங்குமாறு பரிந்துரைத்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று முன்தினம் (24) இரவு, மகனுக்கு தேவையான மருந்தை கொடுக்க தந்தை முயன்றபோது, மகன் அதை எடுக்க மறுத்து, வீட்டில் பதுங்கி உள்ளார்.
அதன்படி தந்தை நாற்காலியில் அமர்ந்திருந்த போது மகன் கோடரியால் தலையில் தாக்கி கொலைசெய்துள்ளமை அப்பகுதியில் ,அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை கைதான மகன் இன்னும் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது