IPL auction 2026 ; மதீசா பத்திரன 18 கோடி ரூபாய்க்கு ஏலம் ; ஐ.பி.எல். வரலாற்றில் 3வது வீரர் என்ற பெருமை!
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனாவுக்கு இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ஒரு புதிய ஒப்பந்தம் கிடைத்தது.
தனது அடிப்படை விலையை 2 கோடி ரூபாயாக நிர்ணயித்திருந்த மதீஷா பத்திரனா, அபுதாபியில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 மினி ஏலத்தில் 18 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு விற்கப்பட்டார்.

சென்னை - கொல்கத்தா இடையே கடும் போட்டி
ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி மதீஷா பத்திரனாவை விடுவித்தது.
வித்தியாசமான பந்துவீச்சு பாணியைக் கொண்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளரான பத்திரனா, சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) சீருடையை அணிந்து, 2022 இந்தியன் பிரீமியர் லீக்கில் அறிமுகமானார்.
அதேவேளை மதீஷா பத்திரனாவை வாங்க சென்னை - கொல்கத்தா இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் இவரது விலை எகிறி கொண்டே சென்றது. இறுதியில் ரூ. 25.20 கோடிக்கு அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாங்கியது.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 3-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.