அசோக ரன்வல மீது ஒழுக்காற்று நடவடிக்கை?
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல தனது கலாநிதி பட்டம் குறித்து மோசடி செய்திருந்தால், அவர் மீது தேசிய மக்கள் சக்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என்று சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எனினும் அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்று கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை என கூறியதாக கொழும்பு ஊடகமொன்று கூறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்களும், வாக்களிக்காதவர்களும் பேசியுள்ளதாகவும், எனவே நடவடிக்கை எடுக்கும்போது அவர்களின் கருத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை தமது கலாநிதி பட்டம் தொடர்பான சான்றிதழை விரைவில் சமர்ப்பிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல கட்சிக்கு வாக்குறுதி அளித்தார். எனினும் இதுவரை அவர் அதைச் செய்யவில்லை என்று நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.