அர்ச்சுனா எம்.பியின் வாயை அடைத்த நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசல்
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசல் என்பவரால் நாடாளுமன்ற உணவகத்தில் வைத்து தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (21) தெரிவித்தார்.
எனினும் கொலை அச்சுறுத்தல் விடுத்தாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் நிராகரித்தார்.

நிராகரிக்கப்பட்ட குற்றசாட்டு
புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஒரு பிரச்சினை தொடர்பில் தான் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாகவும், அது குறித்து முஹம்மட் பைசல் ஆத்திரமடைந்து இவ்வாறு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இது தொடர்பில் முறையான விசாரணையை நடத்துமாறும் இராமநாதன் அர்ச்சுனா கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் குறித்த குற்றசாட்டை நிராகரித்த நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் “ மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே நான் நாடாளுமன்றம் வந்துள்ளேன். அந்தவகையில் புத்தளம் வைத்தியசாலையை தரம் உயர்த்தி தருமாறு ஜனாதிபதியிடம் கேட்டுள்ளோம். இதனை செய்து தருவதாக அமைச்சரும், ஜனாதிபதியும் குறிப்பிட்டுள்ளனர். எனவே, பெயர் பலகை வைக்குமாறு நாம் கோரியதாக கூறும் விடயம் தவறு.
அர்ச்சுனா இங்கு பொய் சொல்கின்றார். எவரையும் நாம் பயமுறுத்தவில்லை. உயர்ந்த சபையை தவறாக வழிநடத்த கூடாது. நபர்களை தனிப்பட்ட ரீதியில்தாக்க முற்படக்கூடாது.” எனவும் சைபல் எம்.பி. குறிப்பிட்டார்.