நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர் கைது ; பொலிஸ் விசாரணையில் பகீர் தகவல்
சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் சிம்புவின் Ex உதவியாளர் சர்புதீன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்களில் தற்போது கைதான சர்புதீனும் ஒருவர். ஏற்கெனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்த இயக்குநர் அமீரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஒவ்வொரு வாரமும் போதை விருந்து
எல்டாமஸ் சாலையில் உள்ள சர்புதீன் வீட்டில் ஒவ்வொரு வாரமும் போதை விருந்து நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கைதான சர்புதீனிடம் இருந்து ரூ.27 லட்சம் ரொக்க பணமும், ஒரு சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.27 லட்சம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், ஒரு கட்சியின் தேர்தல் வியூக நிறுவனத்துடன் சர்புதீன் தொடர்பில் இருப்பதும், அந்நிறுவனத்தின் பணம் தான் என சர்புதீன் தெரிவித்த போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் சர்புதீன் நடத்திய போதை விருந்தில் சினிமா பிரபலங்களும் பங்கேற்றார்களா? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.