யாழில் காணி பிரச்சனையால் அரங்கேறிய கொடூரம் ; மூவர் தலைமறைவு
யாழ்ப்பாணத்தில் காணி பிரச்சனை ஒன்றில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சமபவ்ம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அருகில் இன்றைய தினம் (16) இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 59 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.

மூவர் இணைந்து தாக்குதல்
கொலை சந்தேகநபர்கள் மூவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு கோப்பாய் பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
உயிரிழந்த நபருக்கும் பிறிதொரு நபருக்கும் இடையில் நீண்ட காலமாக காணி பிரச்சனை ஒன்று நிலவி வந்த நிலையில் , இன்றைய தினம் பிரச்சனை முற்றி , கைக்கலப்பாக மாறியுள்ளது.
தந்தை என அழைக்காததால் தாயின் காதலன் தாக்குதல்; மூன்று வயது சிறுமி மரணத்தில் வெளிவரும் அதிர்ச்சிப் பின்னனி
அதன் போது மூவர் இணைந்து தாக்குலை மேற்கொண்டதில் அந்நபர் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் தாக்குதலாளிகள் மூவரையும் அடையாளம் கொண்டுள்ளதாகவும் , அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்கு யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.