முகமாலையில் அடுத்தடுத்து இடம்பெற்ற விபத்து: இருவருக்கு நேர்ந்த விபரீதம்
பளை – முகமாலை பகுதியில் நேற்றிரவு விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று இரவு (18-12-2021) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ். நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த கயஸ் ரக வாகனத்தில் மோதியுள்ளது.
இதனை அடுத்து கயஸ் ரக வாகனத்தின் பின்னே வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாடை இழந்து ஏ9 வீதியருகே கவிழ்ந்து வீழ்ந்தது.
மேலும், அடுத்தடுத்து இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவங்கள் குறித்து மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.