நாடாளுமன்ற கொடுப்பனவுகளை பகிரங்கப்படுத்திய அர்ச்சுனா எம்பி

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Ramanathan Archchuna
By Sulokshi Apr 08, 2026 02:30 PM GMT
Sulokshi

Sulokshi

Report

  நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் வேதனம் மற்றும் கொடுப்பனவுகள் குறித்து பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது 2026 மார்ச் மாதத்திற்கான வேதன பட்டியலை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஆவணத்தின்படி, மார்ச் மாதத்திற்கான அவரது மொத்த வேதனம் மற்றும் கொடுப்பனவுகள் 415,169.93 ரூபாவாகும்.

நாடாளுமன்ற கொடுப்பனவுகளை பகிரங்கப்படுத்திய அர்ச்சுனா எம்பி | Mp Archchuuna Discloses Parliamentary Allowances

மொத்த வேதனம் மற்றும் கொடுப்பனவுகள் 415,169.93 ரூபா

இதிலிருந்து வருமான வரி, வீட்டு வாடகை, மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்கள் என மொத்தம் 19,308.71 ரூபா கழிக்கப்பட்ட நிலையில், அவரது வங்கி கணக்கில் 395,861.22 ரூபா தேறிய வேதனமாக வைப்பிலிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் ஈவிரக்கமற்ற செயல்; முழங்காலில் இருக்க வைத்து சித்திரவதை

மட்டக்களப்பில் ஈவிரக்கமற்ற செயல்; முழங்காலில் இருக்க வைத்து சித்திரவதை

குறித்த வேதன விபரங்களின்படி, மாதாந்த கொடுப்பனவாக 54,285 ரூபாவும், தொலைபேசிக் கொடுப்பனவாக 50,000 ரூபாவும், போக்குவரத்து கொடுப்பனவாக 15,000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் அலுவலக கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவும், எரிபொருள் கொடுப்பனவாக 179,707.93 ரூபாவும், அமர்வு கொடுப்பனவாக 15,000 ரூபாவும் உள்ளடங்கியுள்ளன.

போர் நிறுத்தத்தை மீறி லெபனானில் இஸ்ரேல் உக்கிரத் தாக்குதல்; அச்சத்தில் உலகம்

போர் நிறுத்தத்தை மீறி லெபனானில் இஸ்ரேல் உக்கிரத் தாக்குதல்; அச்சத்தில் உலகம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இவ்வாறான வேதனங்களையே பெறுகின்ற போதிலும், அதன் விபரங்கள் பொதுமக்களுக்குத் தெரிவதில்லை என எம்.பி அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதிகளை விமர்சிப்பதற்கு முன்னர் பொதுமக்கள் இது போன்ற உண்மைத் தன்மைகளைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனவும், வெளிப்படைத்தன்மை மிக முக்கியமானது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவில் அரச வாகனங்களில் இரவில் நடக்கும் கூத்துக்கள்; கண்டுகொள்வார் யாருமில்லையா!

முல்லைத்தீவில் அரச வாகனங்களில் இரவில் நடக்கும் கூத்துக்கள்; கண்டுகொள்வார் யாருமில்லையா!

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US