சினிமாவை மிஞ்சிய சம்பவம்; பொலிஸ் அதிகாரியை தரதரவென இழுத்துச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்!
பொலிஸ் அதிகாரியை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
தப்பிச் செல்ல முயற்சித்த நபரின் மோட்டார் சைக்கிளில் இழுத்துப் பிடித்தவாறு சந்தேக நபரை போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்துள்ள சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளை நிறுத்த கூடாத இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் வினவிய போது அதன் உரிமையாளர் தப்பிச் செல்ல முற்பட்டதாக கூறப்படுகின்றது.
இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர் தப்பிச் சென்றவரின் மோட்டார் சைக்கிளை பின்புறமாக இழுத்து நிறுத்த முயற்சித்துள்ளார்.
எனினும் ஓட்டுனர் பொலிஸ் உத்தியோகத்தரை வீதியில் இழுத்துக்கொண்டு தப்பிச் சென்ற நிலையில், சுமார் எழுபது மீற்றர் சென்ற பின் குறித்த மோட்டார் சைக்கிள் மற்றுமொரு முச்சக்கர வண்டியுடன் மோதிக் கவிழ்ந்தது.
இந்த சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாய மடைந்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட்ட உள்ளது.