இலங்கையில் கோர விபத்து... இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!
கொழும்பு - நவரோஹல பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் இன்றையதினம் (05-05-2024) கிம்புலாவல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த விபத்தில் மிரிஹான மற்றும் மாதிவெல பிரதேசங்களை சேர்ந்த 18 மற்றும் 20 வயதுடைய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
கிம்புலாவல பிரதேசத்தில் இருந்து நவரோஹல திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், எதிர்திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த இருவரும் ஜயவர்தனபுர மற்றும் களுபோவில வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களின் கவனயீனமே விபத்துக்குக் காரணம் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.