யாழில் மோட்டார் சைக்கிள் திருட்டு ; மக்களின் உதவியை நாடிய பொலிஸார்
யாழ்ப்பாணம் – கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணம் வைத்தியசாலை வளாகத்தின் 06ஆம் இலக்க வாயிலின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கருப்பு நிற HONDA மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையம் தெரிவிக்கிறது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் திடீர் மரணம் ; வைத்தியர்கள் மீது குற்றம் சுமத்தும் குடும்பத்தினர்
இந்தச் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியிலுள்ள கண்காணிப்பு கமெரா (CCTV) காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதன்மூலம் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் அறிந்தவர்கள் உடனடியாக கீழ்க்கண்ட தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் வழங்குமாறு பொது மக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைமையக பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரி – 071 859 1329
பொறுப்பதிகாரி, குற்ற விசாரணைப் பிரிவு – 071 238 4310