யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி
யாழ்ப்பாணம் புத்தூரில் இன்று (21) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானார்.
யாழ்ப்பாணத்திலிருந்து மூன்று பேர் அடங்கிய குடும்பத்தினர் பயணித்த மோட்டார் சைக்கிளுடன், இளைஞர்கள் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
மேலதிக விசாரணை
இதன்போது எதிரே வந்த கார் ஒன்றும் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் படு காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் புத்தூர் மணற் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் ஒருவர். மேலும் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிரே மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும், தாயும் மகனும் சிறு காயங்களுக்குள்ளாகினர்.
காயமடைந்தவர்கள் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.