சிறுமியின் 30 வார கருவை கலைக்க அனுமதி வழங்கிய நீதிமன்றம்
மும்பையைச் சேர்ந்த சிறுமி ஒருவரின் 30 வார கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக சிறுமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒரு பெண்ணை அல்லது சிறுமியை கட்டாயமாக கருவை சுமக்க உத்தரவிட முடியாது என்று தெளிவுபடுத்தி இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்தனர்.

விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட சிறுமியின் உடல் மற்றும் மனநலன் முக்கியம் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், கருக்கலைப்பு மேற்கொள்ளும் போது அவளது உடல்நிலையை முழுமையாக கருத்தில் கொள்ள வேண்டும் என்று மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.