பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் ; Chat Gpt உதவியுடன் மகன் செய்த சம்பவம்
உத்தர பிரதேசம் லக்னோவில் உள்ள ராஜேந்திர நகர் பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.
இதையடுத்து அந்த சிறுவன் தனது உடலில் பாலின மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குடும்பத்திடம் தெரிவித்துள்ளான். மேலும் தான் பெண்ணாக உணர்வதால் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளான்.

வாக்குவாதம்
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய், மனநல மருத்துவர்களிடம் அழைத்து சென்று ஆலோசனைக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
ஆனால் மருத்துவரின் ஆலோசனையை சிறுவன் ஏற்காமல், பாலின மாற்று அறுவை சிகிச்சை விஷயத்தில் பிடிவாதமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று லக்னோவில் உள்ள வீட்டில், தனது தாயுடன் இளைஞருக்கு வாக்குவாதம் முற்றியுள்ளது.
நடுவானில் விமானிகளிடையே கத்திக்குத்து ; 174 உயிர்களை காப்பாற்ற 6 வயது சிறுமியும் காரணம்? வெளியான அதிர்ச்சி தகவல்
இதைத்தொடர்ந்து சிறுவன் தனது வீட்டில் இருந்த ஒரு இரும்பு கம்பியால், தாயின் தலையில் பலமாக தாக்கியுள்ளான். இதையடுத்து நிலைதடுமாறி கீழே விழுந்த தாய், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகா ஜிண்டோலா பொலிசார், வீட்டின் உள்ள இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றினர். இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், நடந்த சம்பவம் குறித்து 17 வயது சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
இதைத்தொடர்ந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை கைப்பற்றிய பொலிஸார், பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாயை கொலை செய்த சிறுவன், தான் எதிர்கொள்ளக் கூடிய தண்டனை விவரங்களை சாட்-ஜிபிடி பயன்படுத்தி தகவல்களை சேகரித்துள்ளான். மேலும் தான் கைது செய்யப்பட்ட பிறகு, காவல்துறையினர் தன்னை எங்கு அனுப்புவர் என்பது போன்ற தகவல்களையும் சிறுவன் சாட்-ஜிபிடி மூலம் சேகரித்துள்ளான்.” என்று கூறினார்.