கழிவறை அருகே சடலமாக கிடந்த தாதிய மாணவி ; அதிர வைத்த காதலனின் வாக்குமூலம்
இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் கோத்தகுடம் மாவட்டம், வெங்கண்ணபாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி. பி.எஸ்சி நர்சிங் படித்து வந்தார். இவர் வீட்டில் கழிவறை அருகே கொலை செய்து வீசப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த பவன் என்பவர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.

கடும் வாக்குவாதம்
மேலும் பவன் தலைமறைவானது தெரியவந்தது. பொலிஸார் தொலைபேசி இலக்கம் மூலம் பவன் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
நேற்று (01) இந்த கொலை சம்பவத்தில் பவனை கைது செய்தனர். காதல் தகராறில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பவன் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது,
நடுவானில் விமானிகளிடையே கத்திக்குத்து ; 174 உயிர்களை காப்பாற்ற 6 வயது சிறுமியும் காரணம்? வெளியான அதிர்ச்சி தகவல்
ஹரிணியும் நானும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். ஆனால் இரு குடும்பங்களுக்கும் இடையே முன்பே தகராறுகள் இருந்ததால், ஹரிணிக்கும் எனக்கும் திருமணம் செய்து வைக்கப் பெரியவர்கள் சம்மதிக்கவில்லை. ஹரிணி வேறொரு வாலிபரை காதலிப்பதாக எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.
மேலும் போனிலும் தொடர்பு கொண்டேடின் அவர் இணைப்பைத் துண்டித்துவிட்டார். வீட்டின் பின்புற முற்றப் படிகளில் இருந்த ஹரிணியை, தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அவன் வற்புறுத்தினேன்.
அதற்கு மறுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஏற்கனவே கோபத்தில் இருந்த நான் தயாராக கொண்டு வந்திருந்த பைக்கின் கிளட்ச் வயரால் ஹரிணியின் கழுத்தை இறுக்கினேன் என அவர் கூறியுள்ளார்.