இலங்கையில் இயங்கும் மோசடி மையங்களுக்கு FBI குறி ; அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

Sri Lanka Police Sri Lanka United States of America
By Sahana Nov 16, 2026 07:16 PM GMT
Report

இணையம் சார்ந்த மோசடிகளை முறியடிப்பதற்காகவும், நாடுகடந்த குற்ற வலையமைப்புகளைச் சீர்குலைப்பதற்காகவும் இலங்கை சட்ட அமுலாக்க அமைப்புகளுடனான தனது ஒத்துழைப்பினை அமெரிக்கா பலப்படுத்துகிறது.

அதிதீவிர புயலாக வலுப்பெறும் ‘அக்வான்’ ; இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அதிதீவிர புயலாக வலுப்பெறும் ‘அக்வான்’ ; இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் இயங்கி வரும் மோசடி மையங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருக்கும் இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்காக, இலங்கை அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில், அமெரிக்க சமஷ்டி அரசின் புலனாய்வுப் பணியகமான Federal Bureau of Investigation (FBI) இன் Charlotte Field Office இனைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று நவம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்கிறது.

இலங்கையில் இயங்கும் மோசடி மையங்களுக்கு FBI குறி ; அமெரிக்கா அதிரடி நடவடிக்கை | Fbi Targets Scam Centers Operating In Sri Lanka

ஏற்கெனவே நடைபெற்றுக்கொண்டிருக்கும் விசாரணைகளுக்கு உதவி செய்வதற்காகவும், விசேட தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குவதற்காகவும், நாடுகடந்த மோசடி வலையமைப்புகளை இனங்கண்டு, அவற்றை சீர்குலைப்பதற்கான அமெரிக்க மற்றும் இலங்கை அதிகாரிகளின் திறனை பலப்படுத்துவதற்காகவும் ஒரு பிரத்தியேக குழுவை FBI நிறுவியுள்ளது.

இவ்விஜயத்தின் போது, புலனாய்வு நுட்பங்கள், டிஜிட்டல் தடயவியல் மற்றும் வழக்கு உருவாக்கம் போன்ற விடயங்களில் இலங்கையின் சட்ட அமுலாக்கத் துறையினைச் சேர்ந்த பங்காளர்களுடன் இணைந்து FBI அதிகாரிகள் பணியாற்றுவர்.

இவ்வொத்துழைப்பானது, பாதிக்கப்பட்டவர்களை இனங்காண்பதற்கும், குற்றச் செயல்களின் தடமறிவதற்கும், இணைய மோசடிகளுக்குப் பொறுப்பானவர்களுக்கெதிராக வலுவான வழக்குகளை கட்டமைப்பதற்கும் புலனாய்வாளர்களுக்கு உதவி செய்யும்.

அத்துடன், நாடுகடந்த குற்ற வலையமைப்புகளைச் சேர்ந்த கும்பல்கள் தனது நிலப்பரப்பை தவறாகப் பயன்படுத்தி இணையம் சார்ந்த குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான இலங்கையின் திறனையும் இது பலப்படுத்தும்.

“வெளிநாடுகளில் செயற்படும் குற்ற வலையமைப்புகளைச் சேர்ந்த கும்பல்கள், பில்லியன் கணக்கான டொலர் பணத்தைத் திருடி வருகின்றன.

அவர்களைத் தடுப்பதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் தெரிவித்தார்.

“FBI இன் புலனாய்வு நிபுணத்துவத்தையும், மேம்பட்ட தொழில்நுட்பத்தையும் இலங்கை சட்ட அமுலாக்க அமைப்புகளுடன் ஒன்றிணைப்பதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களை இனங்காண்பதற்கும், குற்றவாளிகளைத் தேடிப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும், இன்னும் பல அமெரிக்கர்களும், இலங்கையர்களும் இத்தகைய மோசடிகளில் சிக்குவதை தடுப்பதற்கும் எம்மால் இயலுமாக இருக்கும்.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

புலனாய்வுத் திறன்களை பலப்படுத்துவதற்கும், மோசடி மையங்களின் செயற்பாடுகளை முறியடிப்பதற்கும் இலங்கை அதிகாரிகளுடனான FBIஇன் ஒரு தொடர்ச்சியான ஈடுபாட்டின் ஆரம்பத்தினை இவ்விஜயம் குறிக்கிறது.

FBI உடனான ஒத்துழைப்புடன் பணியாற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இம்முன்முயற்சிக்கு உதவி செய்கிறது.

நாடுகடந்த குற்ற வலையமைப்புகளைச் சேர்ந்த கும்பல்கள் எங்கெல்லாம் செயற்படுகின்றனவோ அங்கெல்லாம் அவர்களைப் பின்தொடர்வதிலும், அமெரிக்க குடிமக்களை நிதிச் சுரண்டலிலிருந்து பாதுகாப்பதிலும், குற்றவாளிகளைப் பொறுப்பேற்கச் செய்வதற்காக சர்வதேச சட்ட அமுலாக்கத் துறையினைச் சேர்ந்த பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றுவதிலும் அமெரிக்கா உறுதியுடன் உள்ளது.

ஞானசார தேரருக்கு மீண்டும் காவி ஆடை அணிவிக்க கோரிக்கை

ஞானசார தேரருக்கு மீண்டும் காவி ஆடை அணிவிக்க கோரிக்கை

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, வவுனியா

16 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, London, United Kingdom

08 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

16 Nov, 2011
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

வெலிமடை, கொக்குவில், அரியாலை, Mississauga, Canada

14 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US