கழிப்பறைக்கு முன் குழந்தை பிரசவித்த தாய் - சிசு மரணம்
கொழும்பு 10, மாளிகாவத்தையில், சிசுவை பிரசவித்த நிலையில் தாயும் , பிறந்த குழந்தையும், வீட்டின் கழிப்பறைக்கு முன்னால் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்துள்ளனர் என மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர், கொழும்பு 10, மாளிகாவத்தையில் வசிக்கும் இரண்டு குழந்தைகளின் தாயார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இரண்டு குழந்தைகளின் தாயார்
இறந்த பெண் வீட்டின் கழிப்பறைக்கு முன்னால் தரையில் முகம் குப்புறக் கிடந்ததாக கணவர் அளித்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவளுடைய மைத்துனரிடமிருந்து செய்தி வந்ததும், அவர்கள் வீட்டிற்குச் சென்று வீட்டைப் சோதித்தனர், அவளுடைய உடலிலும் தரையிலும் அதிக அளவு இரத்தம் இருப்பதைக் கண்டனர்.
இறந்த மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை அந்த நேரத்தில் அவரது காலடியில் இருந்ததாகவும், குழந்தை தொப்புள் கொடியை வெட்டாமல் ஒரு துணியில் சுற்றப்பட்டிருந்ததாகவும், மனைவியும் குழந்தையும் முச்சக்கர வண்டியில் பொரளை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்களைப் பரிசோதித்த பிறகு, அங்குள்ள மருத்துவர்கள், இருவரும் இறந்துவிட்டதாக அறிவித்தனர். தாய் - சிசு மரணங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.