புத்தாண்டு கொண்டாடிய தாயும் மகனும் ரயிலில் மோதுண்டு படுகாயம்
புத்தாண்டை கொண்டாடிய பின்னர் வீடு திரும்பிய 39 வயதுடைய தாயும் அவரது ஆறு வயது மகனும் ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெந்தோட்டை பகுதியில் வசிக்கும் தாயும் மகனும் செவ்வாய்க்கிழமை (31) இரவு பெந்தோட்டை கடற்கரையில் இடம்பெற்ற வாணவேடிக்கையை கண்டுகளிக்கத்துவிட்டு குடும்பத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த ஆறு வயது குழந்தையின் இடது கை பகுதி காயமடைந்த நிலையில் பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
சிகிச்சையின் பின்னர் தாயும் மகனும் களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பெந்தோட்டை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.