சின்னமுத்து - ருபெல்லா நோய்த்தடுப்பு வாரம் பிரகடனம்!
இலங்கையில் சின்னமுத்து மற்றும் ருபெல்லா நோய்த்தடுப்பு வாரத்தை சுகாதார அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.
அதன்படி இன்று முதல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை தெரிவு செய்யப்பட்ட குடும்ப சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் வீடு வீடாகச் சென்று 9 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட சின்னம்மை தடுப்பூசியைப் பெறாதவர்களைக் கண்டறியும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
சின்னமுத்து – ருபெல்லா தொடர்பில் விழிப்புணர்வு
அத்துடன் சின்னமுத்து – ருபெல்லா தொடர்பில் விழிப்புணர்வு செயற்பாடுகளும் நடாத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை சின்னமுத்து - ருபெல்லா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் 9ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அன்றைய தினம் தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் இந்த மாதத்தில் ஏனைய 4 சனிக்கிழமைகளிலும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள் ஊடாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.