அநாமதேய அழைப்பால் வங்கி கணக்கில் மாயமான பெரும்தொகை பணம்; தவிக்கும் யாழ் நபர்!

Sri Lanka Police Jaffna Sri Lankan Peoples Crime
By Sulokshi Dec 16, 2024 07:21 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் தொலைபேசியில் உரையாடி நூதனமான முறையில் அவரின் வங்கி கணக்கில் இருந்து 2 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் முறையிட சென்ற போதிலும் போலீசார் அவரின் முறைப்பாட்டினை பெற்றுக்கொள்ளாது அலைக்கழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அநாமதேய அழைப்பால் வங்கி கணக்கில் மாயமான பெரும்தொகை பணம்; தவிக்கும் யாழ் நபர்! | Money Has Disappeared Unknown Call Jaffna

தொலைபேசிக்கு குறுந்தகவல்

காரைநகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு நேற்று முன்தினம் (14) தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட ஒருவர் ,

சரிகமபவில் அசத்தும் கனடா வாழ் யாழ்ப்பாண சிறுமி!

சரிகமபவில் அசத்தும் கனடா வாழ் யாழ்ப்பாண சிறுமி!

தன்னை வங்கி ஒன்றின் மானிப்பாய் கிளையில் இருந்து கதைப்பதாக அறிமுகம் செய்து கொண்டு , உங்கள் வங்கி கணக்கு செயலிழந்து விட்டது, அதனை மீள செயற்படுத்த , அடையாள அட்டை இலக்கத்தை கூறுமாறு கேட்டுள்ளார். அதனால் அவரும் அடையாள அட்டை இலக்கத்தை கூறியுள்ளார்.

அநாமதேய அழைப்பால் வங்கி கணக்கில் மாயமான பெரும்தொகை பணம்; தவிக்கும் யாழ் நபர்! | Money Has Disappeared Unknown Call Jaffna

சில மணி நேரத்தில் அவரது மனைவிக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தவர்கள் , கணவரின் வங்கி கணக்கு இலக்கத்தை கூறுமாறு கோரிய நிலையில் அவரும் வங்கி கணக்கு இலக்கத்தை கூறியுள்ளார்.

அதன் பின்னர் , அவரது கணக்கில் இருந்து 05 தடவைகள் 40 ஆயிரம் ரூபாயும் , அதன் பின்னர் 20 ஆயிரம் ரூபாய் , 06 ஆயிரம் ரூபாய் என 2 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக தொலைபேசிக்கு குறுந்தகவல் வந்துள்ளது.

அமைச்சர்களின் கல்வித் தகுதிகளால் தொடரும் சர்ச்சைகள்

அமைச்சர்களின் கல்வித் தகுதிகளால் தொடரும் சர்ச்சைகள்

இதனால் அதிர்ச்சியடைந்த நபர் , வங்கிக்கு நேரில் சென்று வங்கி முகாமையாளரிடம் கேட்ட போது , பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அலைக்கழித்த  பொலிஸார் 

வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டதால் , யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற போது , அதனை உங்கள் பிரிவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு கூறி பாதிக்கப்பட்டவரை பொலிஸார் திருப்பியனுப்பியுள்ளனர்.

அதன்பின்னர் அவர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையம் சென்ற போது , வங்கி மானிப்பாய் பகுதி என்பதால் , மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுங்கள் என கூறியுள்ளனர்.

அநாமதேய அழைப்பால் வங்கி கணக்கில் மாயமான பெரும்தொகை பணம்; தவிக்கும் யாழ் நபர்! | Money Has Disappeared Unknown Call Jaffna

மானிப்பாய் பொலிஸ் நிலையம் சென்ற போது , வங்கி கிளை அமைந்துள்ள பகுதி வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குள் வருகிறது எனவே வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுங்கள் என கூறியுள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் சென்ற போது , முறைப்பாட்டை எழுத தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் இல்லை என கூறி பிறகு வருமாறு கூறி அனுப்பியுள்ளனர்.

யாழ் பல்பொருள் அங்காடியில் பெண்களின் மோசமான செயல்; காட்டிக்கொடுத்த CCTV!

யாழ் பல்பொருள் அங்காடியில் பெண்களின் மோசமான செயல்; காட்டிக்கொடுத்த CCTV!

பொலிஸ் நிலையத்தில் முறைப்படு செய்வதற்காக பாதிக்கப்பட்டவர் சுமார் 150 கிலோ மீற்றர் தூரத்திற்கு மேல் அலைக்கழிக்கப்பட்டும் முறைப்பாட்டை எந்த பொலிஸ் நிலையமும் ஏற்கவில்லை என பாதிக்கப்பட்டவர் க்வலை வெளியிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US