விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த ஆண் குழந்தை! தாய் - தந்தை வைத்தியசாலையில்
மொனராகலை - செவனகலை பகுதியில் முச்சக்கரவண்டி விபத்தில் ஒரு வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், குறித்த விபத்தில் குழந்தையின் தந்தையும், தாயும் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்றையதினம் (21-01-2025) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குடும்பத்தினர் பயணித்த முச்சக்கரவண்டி வேகக் கடுப்பாட்டை இழந்து வீதியில் இருந்து விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரு வயது ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.
முச்சக்கரவண்டிச் செலுத்திச் சென்ற 36 வயதான குழந்தையின் தந்தையும் முச்சக்கரவண்டி பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த தாயும் படுகாயங்களுடன் செவனகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.