நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இவ் விடயம் தொடர்பாக எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அனுராதபுரம் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, இது தொடர்பாக அனுராதபுரம் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பித்திருந்தனர்.
இதன்படி, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.