நுவரெலியாவில் நவீன தீம் பார்க் ; உருவாகும் புதிய திட்டம்
இதேவேளை நுவரெலியாவில் கிரெகரி வாவியை அண்டியுள்ள காணியில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நவீன தீம் பார்க் (பொழுதுபோக்கு பூங்கா) ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 10 ஏக்கர், 3 ரூட் மற்றும் 28.04 பேர்ச்சஸ் கொண்ட காணி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

காணி குத்தகை
பயன்படுத்தப்படாத அரச காணிகளை அபிவிருத்தி செய்வது குறித்து ஆராய அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவே, இந்த நிலப்பரப்பை சுற்றுலாத் திட்டத்திற்காகப் பயன்படுத்தப் பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, தகுதியான முதலீட்டாளருக்கு சர்வதேச போட்டித்தன்மை வாய்ந்த ஏல நடைமுறையின் கீழ் 50 ஆண்டுகளுக்கு இந்தக் காணி குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது.
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக முதலீட்டு முன்மொழிவுகளைக் கோருவதற்கு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.