யாழ் நல்லூர் திருவிழாவில் தவறவிடப்பட்ட பொருள்களைப் பெறலாம்
வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருந்திருவிழாக்காலத்தில் பக்தர்களால் தவறவிடப்பட்டு இதுவரை உரிமைகோரி பெற்றுக்கொள்ளப்படாத பொருள்கள் மாநகரசபையில் ஒப்படைக்கப் பட்டுள்ளன.
அந்தவகையில் (சிறு கைச்சங்கிலி 1, மோதி ரம்(பெண்) 1, பணப்பைகள் 9, மணிக்கூடுகள் 18, தேசிய அடையாள அட்டை 4, சாரதி அனுமதிப்பத்திரம் 4, வங்கி அட்டைகள் 4. திறப்புகள் 39) என்பன மாநகரசபையில் ஒப்படைக்கப் பட்டுள்ளன.
எனவே இவற்றை உரிமையாளர்கள் உரிய ஆதாரங்களை உறுதிப்படுத்தி மாநக ரசபை நிர்வாகக் கிளையில் அலுவலக நேரத்தில் 11ஆம் திகதி புதன்கிழமை தொடக் கம் ஒக்ரோபர் மாதம் 10ஆம் திகதி வியாழக்கி ழமை வரை பெற்றுக் கொள்ளலாம் என யாழ்.மாநகரசபை ஆணையாளர் அறிவித் துள்ளார்.