வங்கி சென்று திரும்பிய வயோதிப மாதுவிற்கு நடுவழியில் நேர்ந்த அவலம்!
சமுர்த்தி தொகையைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குச் சென்றுக் கொண்டிருந்த வயோதிப தாயின் பணம் வீதியில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட 14,500 ரூபா பணம் அவரிடம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தெல்துவ சமுர்த்தி வங்கியில் இருந்து உரிய பணத்தை எடுத்துக்கொண்டு வீதியில் சென்று கொண்டிருந்த வயோதிபப் பெண்ணிடம் சந்தேகநபர் இவ்வாறு கொள்ளையடித்துள்ளதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
08 மாத நிலுவைத் தொகை
குறித்த பெண் சமுர்த்தி வங்கியில் இருந்து 08 மாத நிலுவைத் தொகையுடன் பண்டாரகம களுத்துறை வீதியில் களுத்துறை நோக்கி நடந்து சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவள் பின்னாலேயே வந்த சந்தேக நபர், “அம்மாவின் அடையாள அட்டை சரியாக இருக்கிறதா என்று சமுர்த்தி மிஸ் பார்க்கச் சொன்னார்” என்று கூறியுள்ளார்.
அதனை நம்பிய வயோதிபப் பெண் அடையாள அட்டையைக் காட்டியவுடன், அவர் வைத்திருந்த 14,500 ரூபா பணத்தைத் திருடிய சந்தேக நபர் நுககொட நோக்கி தப்பிச் சென்றுள்ளார்.
வயோதிபமாது கண்ணீர்
குறித்த பெண்ணின் கணவர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த காலங்களில் வீட்டிற்கு அருகில் உள்ள கடையொன்றில் கடனாக பெற்ற பொருட்களைக் கொண்டு பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
அந்த பொருட்களுக்கு 7,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேசமயம் வயோதிப பெண் சமுர்த்தி பணத்தை எடுத்த போது பணத்தை கொள்ளையடித்த சந்தேக நபரும் அங்கு இருந்துள்ளதாக கூறப்படும் நிலையில் எனினும் அவர் யார் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை.