அமைச்சர் ஆனந்த விஜேபால பதவி வகிக்க தகுதியற்றவர் ; மனு தாக்கல்
இலங்கை அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர், அவர் எம்பியாக பதவி வகிக்க தகுதியற்றவர் என்றும் அறிவிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெரமுனவின் (SLPP) நிர்வாகச் செயலாளர் ரேணுகா துஷ்யந்த பெரேரா, அமைச்சர் விஜேபாலவின் பாராளுமன்ற உறுப்பினராகத் தொடர்வதற்கான தகுதியை சவாலுக்குட்படுத்தி மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அமைச்சர் விஜேபால, ஜனாதிபதியின் தலைமை அதிகாரிகாரியாக நியமிக்கப்பட்டதன் மூலம், தன்னை அரச அதிகாரியாக மாற்றியுள்ளதாக மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசு பதவிகளை வகித்து அரசுடன் வேலை ஒப்பந்தம் செய்வதன் மூலம் இந்த நியமனம் அமைச்சர் விஜேபாலவை பாராளுமன்றத்தில் அமர்ந்து வாக்களிக்க தகுதியற்றவர் என்று வாதிடுகிறது.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தகுதியை நிர்வகிக்கும் அரசியலமைப்பு விதிகளை மீறுகிறது என்றும் அந்த மனுவில் சுட்டிகாட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.