பிரான்ஸில் இருந்து நண்பியை காண சுவிஸ் சென்ற யாழ் குடும்பஸ்தர் நையப்புடைப்பு
பிரான்ஸில் இருந்து தனது நண்பியை காண சுவிஸ் சென்ற யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட இரு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர், சுவிஸ்வாழ் பெண்ணின் கணவனால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மகள், பொலிஸாருக்கு தகவல்
குறித்த பிரான்ஸ் வாழ் தமிழர் , சுவிட்சர்லாந்தில் வசிக்கும், யாழ்ப்பாணம் தீவு பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் நட்பில் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து நண்பியை காண சுவிட்சர்லாந்திற்கு சென்றதாக கூறப்படுகின்றது.
நண்பி வீட்டுக்கு பிரான்ஸ்நபர் சென்றபோது அங்கு வந்த பெண்ணின் கணவன் பிரான்ஸ் நபரை நையப்புடைத்துடன், மனவியையும் தாக்கி விட்டு சென்றதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து தாக்குதலுக்குள்ளான பெண்ணின் 18 வயது மகள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, அங்கு சென்ற பொலிஸார், பிரான்ஸ் வாழ் நபரையும், பெண்ணையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
அதேசமயம் இருவர் மீதும் தாக்குதல் நடத்திய பெண்ணின் கணவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.