50 வருடத்தின் பின் மகா கும்பாபிசேகம் ; யாழ் பிரசித்திபெற்ற ஆலயத்தில் பிரதமர் ஹரிணி வழிபாடு!
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (11) காலை இடம்பெற்றது.
இந் நிலையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய பகல் வேளையில் ஆலயத்துக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
பிரதமர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே ஆலய வழிபாட்டிலும் கலந்துகொண்டார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு ஆலய வளாகத்துக்குள் விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் மற்றும் பிரதமர் பாதுகாப்பு பிரிவினர் அனைவரும் குவிக்கப்பட்டனர்.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் ஆலயத்துக்கு வருகை தந்த பக்தர்கள் சோதனையிடப்பட்டு கெடுபிடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்ததால் பக்தர்கள் விசனம் தெரிவித்ததையடுத்து ஆலய தர்மகர்த்தா முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



