நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்: பரிதாபமாக உயிரிழந்த சிறுமி! தாய் வைத்தியசாலையில்
மாத்தறை பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த 8 வயது குழந்தை ஒன்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேறையதினம் (04-04-2024) காலை மாத்தறை, தங்காலை பிரதான வீதியின் உடதெனிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும், உடதெனிய பகுதியில் டிப்பர் வாகனமும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியின் பின் இருக்கையில் பயணித்த தாய் மற்றும் அவரது மகன் ஆகியோர் படுகாயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் சிகிச்சை பலனின்றி 8 வயதுடைய குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் படுகாயமடைந்த பெண் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் முச்சக்கர வண்டி சாரதி வைத்தியசாலையை விட்டு வெளியேறிய நிலையில் பொலிஸாரரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.