பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் கைதான நபர்
களுத்துறை பிரதேசத்தில் பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் சந்தேக நபர் ஒருவர் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் பொக்குனுவிட, வெலிகட பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல கோடி ரூபா பெறுமதியானது
சந்தேக நபரிடமிருந்து 9 கிலோ 930 மில்லிகிராம் திமிங்கில வாந்தி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட திமிங்கில வாந்தி பல கோடி ரூபா பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றப் புலய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.