சிறப்புமுகாம் அகதிகள் விடுதலை பெற தொடர்ந்து குரல் கொடுக்கும் நெடிசின்கள்
சிறப்புமுகாம் மூடப்பட்டு அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் யாவரும் விடுதலை பெற நாம் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டியுள்ளது என சமூக வலைத்தளங்களில் நெடிசின்களால் பகிரப்பட்டு வருகின்றது
1990ம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் சிறப்புமுகாம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இப்போதுதான் தமிழ் மக்கள் பலரின் கவனத்தை சிறப்புமுகாம் பெற்றுள்ளது.
அதற்கு காரணம், உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஏழு தமிழரில் நாலு ஈழத் தமிழர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டதே.
அதுவும் சாந்தன் மரணம் இச் சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்து தமிழ் மக்கள் அறியும் வாய்ப்பை ஏற்படுத்தியது.
மக்கள் மத்தியில் இருந்து பலரும் குரல் எழுப்பியதால் முருகன், பயஸ், ஜெயக்குமார் விடுதலை பெற்றுள்ளனர்.
ஆனாலும் சிறப்புமுகாம் மூடப்பட்டு அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் யாவரும் விடுதலை பெற நாம் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டியுள்ளது என நெடிசின்கள் கூறுகின்றனர்.