பிரபல சமையல் போட்டியில் அசத்திய இலங்கை பெண்! வியந்து போன நடுவர்கள்
அவுஸ்திரேலியாவில் பிரபலமான MasterChef Australia சமையல் போட்டியின் இறுதிப்போட்டிக்கு இலங்கையை சேர்ந்த சவிந்திரி பெரேரா என்ற பெண் தெரிவாகியுள்ளார்.
குறித்த சமையல் போட்டியில் இறுதியாக நடந்த சுற்றின் போது சவிந்திரி பெரேரா வாழை இலையில் உணவு வழங்கியிருந்தார். மேலும் அது பரிமாறப்பட்ட விதம் நடுவர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த போட்டியில் இலங்கையின் சில கறிகளுடன் வாழை இலையில் சுற்றப்பட்டு உணவு பரிமாறப்பட்ட விதம் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் சவிந்திரி பெரேரா போட்டியின் ஒரு சுற்றில் விலக வேண்டியிருந்த போதிலும், ஏற்பாட்டுக் குழு மற்றும் நடுவர்கள் அவரை மீண்டும் போட்டியில் இணைத்துக் கொண்டனர்.
அவர் தயாரித்த இலங்கை உணவுகளை நடுவர்கள் விரும்பி உட்கொண்டதால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும் சவித்திரி மீண்டும் தங்கள் இதயங்களில் நுழைந்துவிட்டதாக நடுவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
MasterChef Australia நடுவர்கள் சவிந்திரியின் முன்னைய போட்டிகளில் தயாரித்த சுவையான இலங்கை உணவு வகைகளை ருசித்துவிட்டு மீண்டும் போட்டிக்குத் திரும்புவதற்கு அவர் தெரிவு செய்திருந்தனர்.
சவிந்திரி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில்,
MasterChef Australia போட்டியில் இதுபோன்ற இலங்கை உணவை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.