கொழும்பு துப்பாக்கிச்சூடு.. சந்தேக நபர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
அத்துருகிரிய பகுதியில் கடந்த 08 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் மன்னாருக்கு சென்று தலைமன்னார் ஊடாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உள்ளதாக புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக புலனாய்வு செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மன்னாருக்கு சென்று இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல சந்தர்ப்பங்கள் உள்ளன.
இதனாடிப்படையில் மன்னாருக்குச் செல்லும் பிரதான பாலத்தடியில் விசேட இராணுவ சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், வேறு மாவட்டங்களில் இருந்து மன்னாரிற்குள் நுழைகின்ற சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன