சித்திரை புத்தாண்டு சுபநேர பத்திரத்தை தயாரித்த சர்வஜன அதிகாரம்
தமிழ் சிங்கள் புத்தாண்டு விரவில் வரவுள்ள நிலையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புத்தாண்டு சுபநேர பத்திரம் ஒன்றை தயாரிக்குமாறு, பெபிலியான சுனேத்ரா மகா தேவி பிரிவென் ரஜமகா விகாரையின் பரிவேணாதிபதி பேராசிரியர் வண. மெதகொட அபயதிஸ்ஸ தேரரிடம் அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இன்று (14) அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கலாசார திணைக்களம் 2024 ஆம் ஆண்டில் 'அரச சுபநேரக் குழுவை' கலைத்ததோடு, அரசாங்கம் இதுவரையில் மீண்டும் ஒரு சுபநேரக் குழுவை நியமிக்கவில்லை.

அரச சுபநேரக் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை
இம்முறை புத்தாண்டு சுபநேரங்கள் போயா குழுவின் உறுப்பினர்களாலேயே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அரச சுபநேரக் குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து ஜோதிடர்கள் குழுவொன்று கடந்த செவ்வாய்க்கிழமை (10) அரசாங்கத்திற்கு தமது அதிருப்தியை வெளியிட்டது.
இதற்கிடையில், ஜோதிடர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அடங்கிய குழுவொன்று புத்தசாசன அமைச்சுக்கு சென்று அரச சுபநேரக் குழுவை உடனடியாக மீளச் செயற்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில், அரச சுபநேரக் குழுவை ஸ்தாபிக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்காவிடின், தமது கட்சியின் தலையீட்டின் மூலம் மக்களுக்கான புத்தாண்டு சுபநேர பத்திரத்தை முன்வைப்பதாக 'சர்வஜன அதிகாரம்' அறிவித்திருந்தது.
இதற்கமைவாக, 'சர்வஜன அதிகாரம்' அரசாங்கத்திற்கு வழங்கிய காலக்கெடு இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், உறுதியளித்தபடி அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புத்தாண்டு சுபநேர பத்திரம் ஒன்றை தயாரிக்குமாறு, பெபிலியான சுனேத்ரா மகா தேவி பிரிவென் ரஜமகா விகாரையின் பரிவேணாதிபதி பேராசிரியர் வண. மெதகொட அபயதிஸ்ஸ தேரரிடம் அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இன்று (14) அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக 'சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர உள்ளிட்ட குழுவினர் இன்று முற்பகல் குறித்த பிரிவெனாவுக்குச் சென்று பேராசிரியர் வண. மெதகொட அபயதிஸ்ஸ தேரரை சந்தித்தனர்.
இதற்கிடையில், பேராசிரியர் வண. மெதகொட அபயதிஸ்ஸ தேரரின் அழைப்பின் பேரில் 17 ஜோதிடர்கள் இன்று சுனேத்ரா மகா தேவி பிரிவெனாவுக்கு வருகை தந்து கலந்துரையாடியதுடன், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புத்தாண்டு சுபநேர பத்திரத்தை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி, அனைவரினதும் இணக்கப்பாட்டையடுத்து குறித்த புத்தாண்டு சுபநேர பத்திரம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.