தமிழர் பகுதியில் பற்றி எரியும் க்ஷோ ரூம்
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த இலத்திரனியல் காட்சியறை இன்று (25) காலை 9. 45 மணியளவில் தீப்பரவலுக்குள்ளாகி முழுமையாக எரிந்தது.

இந்நிலையில் க்ஷோ ரூமில் இருந்த பெறுமதியான பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதுடன் கட்டிடமும் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க வவுனியா நகரசபை தீயணைப்பு படையினர் வாகனங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வாகனங்கள்,மற்றும் தீயணைக்கும் வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காட்சியறையின் மேல் தளத்தில் மின்னொழுக்கில் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் தீயே இந்தக் காட்சியறை முழுமையாக எரிந்தமைக்கு காரணம் என கூறப்படுகின்றது.
