திருமண கோலத்தில் சடலமாக கிடந்த பெண் ; அருகில் கிடந்த ஆண் ; மர்ம மரணத்தால் பரபரப்பு
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள பட்டி கும்ஹாரா கிராமத்தை சேர்ந்தவர் யாசூல்(வயது 20). இவரும், அதே கிராமத்தை சேர்ந்த முஸ்கான்(வயது 18) என்ற பெண்ணும் அங்குள்ள கைவிடப்பட்ட வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கில் தொடங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
இதில் இளம்பெண் முஸ்கான் திருமண கோலத்தில் இருந்துள்ளார். முஸ்கான் இந்து மதத்தைச் சேர்ந்தவர் ஆவார். அதே போல் யாசூல் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்களா? என சந்தேகம் எழுந்த நிலையில், இருவரின் குடும்பத்தினரும் இதனை மறுத்துள்ளனர்
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிஸார் உயிரிழந்த இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.