இலங்கையில் அசைவ பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!
இலங்கையில் கடந்த சில வாரங்களாக மீன்களின் விலைகள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது மீன்களின் மொத்த விலை 50 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக பேலியகொடை மத்திய மீன் சந்தையின் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மீன் கொள்வனவுக்கான கேள்வி குறைந்துள்ளமையினால் இவ்வாறு பாரியளவில் மீன் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக பேலியகொடை மத்திய மீன் சந்தையின் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமாராச்சி தெரிவித்தார்.
பாறை, தலபத், ஷீலா உள்ளிட்ட பல்வேறு மீன் வகைகளின் விலை குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், பேலியகொடை மீன் சந்தையில் ஹரல்லோ மீன் 550 ரூபாவாகவும், சாலை மீன் 300 ரூபாவாகவும், பலயா மீன் 600 ரூபாவாகவும், பரவ் மீன் 800 ரூபாவாகவும், கெலவல்லா மீன் 1000 ரூபாவாகவும், லின்னா மீன் 500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.