ரணில் விக்கிரமசிங்க மற்றும் சமன் ஏக்கநாயக்க வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.
அரச நிதியைத் தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29) விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்ட போதே வழக்கு பிற்போடப்பட்டுள்ளது .

அடுத்த வழக்கு விசாரணையின் போது, விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் பின்வரும் விடயங்களை நீதிமன்றத்தில் தெரிவித்தார், எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதிக்கு முன்னதாக சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேசமயம் வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்ரி விக்கிரமசிங்கவையும் பெயரிடுவதா என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து, விசாரணைகளின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றங்களை அடுத்த தவணையின் போது சமர்ப்பிக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.