மார்ச் மாத ராசிபலன் ; 6 கிரகங்களின் சேர்க்கை ; இவர்களுக்கு யோகம் தான்!
மார்ச் மாதம் 2025ல் மீன ராசியில் 6 கிரகங்களின் சேர்க்கை நடக்க உள்ளன. மீனத்தில் சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன், சனி, ராகு சுக்கிரன், புதன் என கிரகங்களின் பெயர்ச்சி, சேர்க்கை நடக்கின்றன.
இந்நிலையில் 6 கிரகங்களின் சேர்க்கையால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளுக்கு கிடைக்கவுள்ள பலர்கள்,
சிம்மம் ,
சிம்ம ராசிக்கு மார்ச் மாதம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக அமையும். மாத தொடக்கத்தில் உங்களுக்கு சுகமாகவும், வெற்றிகள் கிடைக்கக் கூடியதாகவும் இருக்கும். முக்கிய வேலைகளை முடிப்பதில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
காதல் தொடர்பான விஷயத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். மாதத்தின் இரண்டாம் வாரத்தில் உங்கள் பேச்சில் கவனம் தேவை. யாரையும் கிண்டல், கேலி செய்ய வேண்டாம். வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். முக்கிய விஷயங்களை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.
கன்னி,
கன்னி ராசி சென்றவர்களுக்கு இந்த மார்ச் மாதத்தில் தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக சாதகமான பலன்கள் கிடைக்கும். வணிகத்தில் விரும்பிய லாபம் கிடைப்பதால், உங்கள் தொழிலை விரிவுபடுத்த வாய்ப்புகள் உருவாகும்.
வேலை தொடர்பாக சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கும். போட்டி தேர்வுக்கு தயாராகக்கூடிய மாணவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற நல்ல பலனை பெறுவீர்கள்.
சமூகப் பணி, ஆன்மீக பணிகளுக்காக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சில சுப காரியங்கள் நடக்கும். நீண்ட காலமாக வீடு, மனை வாங்க நினைத்தவர்களுக்கு வாய்ப்புகள் உருவாகும்.
துலாம்,
துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த மார்ச் மாதம் மிகவும் சிறப்பானதாகவும், வெற்றிகள் தரக்கூடியதாக அமையும். மாதத் தொடக்கத்தில் வீட்டிலும், பணியிடத்திலும் பிறரின் ஆதரவைப் பெறுவீர்கள்.
உங்களின் சிறப்பான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். பதவி அல்லது முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். மாதத்தின் பிற்பகுதியில் வணிகம் தொடர்பாக முன்னேற்றம் ஏற்படும். விரும்பிய லாபம் கிடைக்கும். வீட்டை பராமரிப்பது, அலங்கரிப்பது தொடர்பாக செலவுகள் ஏற்படும்.
இந்த மாதத்தில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். போட்டி தேர்வு, விளையாட்டு தொடர்பான முயற்சிகளில் மாணவர்களுக்கு அலைச்சல் ஏற்படும். பொருள்கள் கவனத்துடன் செயல்பட வேண்டிய மாதம். மாதத்தின் நடுவில் செல்வாக்கு மிக்க நபர்களின் அறிமுகம், ஆதரவு கிடைக்கும்.
இந்த மாதத்தில் ஆன்மீகம், சமூக பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காதல் உறவில் அன்பும், நல்லிணக்கமும் இருக்கும்.
விருச்சிகம்,
விருச்சிக ராசிக்கு மார்ச் மாதத்தின் முதல் பகுதி சில பிரச்சனைகளும், கவலைகளும் தரக்கூடியதாக இருக்கும். இந்த மாதத்தின் பெரும்பாலான நேரம் குடும்பம் மற்றும் வேலை தொடர்பான பிரச்சனைகளை சமாளிப்பதில் செலவாகும்.
நிலம், சொத்து தொடர்பான குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். காதல் உறவில் தவறான பதில்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் எதிரிகள் செய்தல் கவனம் தேவை. உடல் நலனில் அக்கறை காட்டவும். பருவ கால நோய் பாதிக்க வாய்ப்புள்ளது.
இரண்டாம் வாரத்தில் பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. முதலீடு தொடர்பான விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்படவும். குறுகிய ஆதாயத்திற்கு ஆசைப்பட வேண்டாம்.
வேலை தொடர்பாக புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமண உறவு வலுவாக இருக்கும். பணியிடத்தில் தவறான பொருள்கள் நீங்கும். இந்த மாதத்தில் உங்கள் உணவு மற்றும் உடல் நலம் மீது கவனம் தேவை.