தமிழர் பகுதியொன்றில் பயங்கர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!
மன்னாரில் உள்ள பகுதியொன்றில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்திருப்பதாக தெரிய வருகிறது.
இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (24-06-2024) மாலை 5.00 மணியளவில் முருங்கன் ரயில் கடவை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மன்னாரிலிருந்து சென்ற தென் பகுதியை சேர்ந்த தனியார் பேருந்தும், வவுனியா பகுதியில் இருந்து முருங்கன் வீதி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் முருங்கன் - கற்கிடந்தகுளம் கிராமத்திற்கும் இடையில் உள்ள ரயில்வே கடவைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்.
உயிரிழந்தவர் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள சாளம்பன் நாக செட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் தீபன் என தெரியவந்துள்ளது.
மேலும், சடலம் முருங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.