யாழில் கோர விபத்து ; மோட்டார் சைக்கிள் ரயில் மோதி இளைஞர் படுகாயம்
யாழ்ப்பாணம் - அரியாலை, 13ஆம் கட்டைப் பகுதியில் இன்றையதினம் ரயில் விபத்தொன்று சம்பவித்துள்ளது.
மேலதிக விசாரணை
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதிப் ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் அரியாலையைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துத் தொடர்பாகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கடந்த காலங்களிலும் பல உயிரிழப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகப் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இங்கு உரிய பாதுகாப்பு வேலி அல்லது கடவையை அமைக்குமாறு கோரிப் பலமுறை போராட்டங்கள் நடத்தியும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.