20 மனைவிகளுடன் குசியாக வாழும் மனிதர்; வாயடைத்துப்போன இணையவாசிகள்!
தான்சானியா நாட்டை சேர்ந்த ஒருவர் 20 மனைவிகளுடன் வாழ்ந்து வரும் தகவல் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தான்சானியாவில் பழங்குடியினத்தில் திருமணத்திற்கு தடையில்லாததின் காரணத்தினால் அவர் 20 திருமணங்களை செய்து கொண்டதாக தெரிய வருகிறது.
கபிங்கா எனப் பெயர் கொண்ட நபர் 20 மனைவிகளுடன் ஒரே வீட்டில் தகராறு இல்லாமல் வாழ்ந்து வருகிறாராம்.
16 மனைவிகள், 104 குழந்தைகள்,144 பேரக்குழந்தைகள்
அவருக்கு ஆண்களும் பெண்களுமாக 104 பிள்ளைகளும் 144 பேரன் பேத்திகளும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஒடிட்டி சென்ட்ரலின் (Oddity Central) அறிக்கையின்படி,
தான்சானியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் கபிங்கா என்ற நபர் வசித்து வருகிறார். அவருக்கு தற்போது 16 மனைவிகள், 104 குழந்தைகள் மற்றும் 144 பேரக்குழந்தைகள் உள்ளனர். வீட்டை தாண்டி, ஒரு கிராமம் போலவே வாழ்ந்து வருகின்றனர்.
1961இல் கபிங்கா முதல் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். அவரது தந்தை குடும்பத்தை விரிவுபடுத்தும்படி கேட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன் இன்னும் திருமணம் செய்தால், வரதட்சணைக்கு பணம் தருவதாக முன்மொழிந்துள்ளார். இதையடுத்து 7 உண்மையான சகோதரிகளை அவர் மணந்துள்ளார்.
கபிங்காவின் தந்தை அவரது 5 திருமணங்களுக்கு பணம் கொடுத்துள்ளார். ஆனால் அடுத்தடுத்த திருமணங்களை அவரே செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், பலருக்கும் இந்த தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.