வைத்தியசாலைக்குள் பெரும் அடாவடித்தனம் ; தனிநபரால் நிறுத்தப்பட்ட மருத்துவ பணிகள்
காயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஒருவர் வைத்தியசாலை ஊழியர்களை அச்சுறுத்திய சம்பவத்தைத் தொடர்ந்து நுவரெலிய - டயகம பிராந்திய வைத்தியசாலையின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட்டவர்களுக்கு உரியப் பாதுகாப்பு இல்லை என்று கூறியே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பணியாளர்களுடன் வாக்குவாதம்
முன்னதாக, கடந்த 20 ஆம் திகதி, தாக்குதலில் காயமடைந்த ஒருவர் மேலும் சிலருடன், டயகம வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். இதன்போது, குறித்த குழுவினர் வைத்தியசாலை பணியாளர்களுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், வைத்தியசாலையின் இரண்டு பணியாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
அதேவேளை, வைத்தியசாலையின் வாகன ஓட்டுநரும் குறித்த குழுவினரால் தாக்கப்பட்டதாக, மருத்துவமனை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.