நிலத்தகராறில் பெண்ணின் காதை கடித்த நபர் ; மனித உரிமைகள் ஆணைக்குழு தலையீடு

Sri Lanka Police Human Rights Council Nuwara Eliya
By Sahana Aug 12, 2026 08:37 PM GMT
Report

நுவரெலியா – சீத்தாஎலிய, போலகந்த பகுதியில் நிலத் தகராறு காரணமாக பெண்ணொருவரின் காதைக் கடித்த நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியதாக நுவரெலியா பொலிஸார் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நுவரெலியா பிரதேச செயலாளருக்கு பரிந்துரைகளை அனுப்பியுள்ளது.

அரசாங்கத்தின் 22ஆவது திருத்தத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கடும் எதிர்ப்பு

அரசாங்கத்தின் 22ஆவது திருத்தத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கடும் எதிர்ப்பு

சீத்தாஎலிய பகுதியைச் சேர்ந்த நோனா பட்டோன் என்பவரின் காணிக்கு முன்பாக அமைந்துள்ள பாதையைப் பயன்படுத்துவது தொடர்பாக, கடந்த மார்ச் 4ஆம் திகதி அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது அவரது காதைக் கடித்து காயப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், பொலிஸாரும் கிராம உத்தியோகத்தரும் ஒருதலைப்பட்சமாகச் செயற்பட்டு, மத அடிப்படையில் பாரபட்சம் காட்டி சந்தேகநபருக்கு ஆதரவாக செயற்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

நிலத்தகராறில் பெண்ணின் காதை கடித்த நபர் ; மனித உரிமைகள் ஆணைக்குழு தலையீடு | Man Bites Off Woman S Ear Over Land Dispute

இதனையடுத்து, ‘United Human Rights Organization’ அமைப்பினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது தொடர்பில் முறைப்பாடு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டை விசாரணைக்கு உட்படுத்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, 1996ஆம் ஆண்டு 21ஆம் இலக்க மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ், நுவரெலியா பொலிஸார் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அணுகுமுறை தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூலை 31ஆம் திகதி நுவரெலியா பிரதேச செயலாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்று சுமார் ஆறு மாதங்கள் நெருங்கியுள்ள நிலையிலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை என ‘United Human Rights Organization’ அமைப்பின் பணிப்பாளர் பிரணீதா வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

அரச அதிகாரிகள் எந்தவிதமான மதப் பாகுபாடுகளுக்கும் இடமளிக்காமல், வெளிப்படையானதும் நியாயமானதுமான விசாரணைகளை முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இலங்கையில் அதிகரிக்கும் யானைகளின் மரணங்கள் ; சுற்றாடல் அமைச்சு எச்சரிக்கை

இலங்கையில் அதிகரிக்கும் யானைகளின் மரணங்கள் ; சுற்றாடல் அமைச்சு எச்சரிக்கை

100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US