இலங்கையில் 22 திறந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நபருக்கு நேர்ந்த கதி!
கந்தானை - கந்தேவத்த பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கந்தானை பொலிஸார் நேற்று மாலை (02-11-2024) மேற்கொண்டிருந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் கைதான நபர் மதுரங்குளிய பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவருகிறது.
சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், சந்தேகநபருக்கு எதிராக கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் குறித்து நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு, புத்தளம் மற்றும் நீர்கொழும்பு நீதிமன்றங்கள் 22 திறந்த பிடியாணைகளை பிறப்பித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.