ஆடையின்றி ஓடி மக்களைக் கட்டியணைக்க முயன்ற நபர் கைது
இங்கிலாந்தின் கிளாவுஸ்டர் நகரில் உள்ள கிளாரன்ஸ் வீதியில் (Clarence Street), துணியின்றி வீதியில் உலாவி பொதுமக்களைக் கட்டியணைக்க முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 5ஆம் திகதி அதிகாலை 5.00 மணியளவில், நாற்பதுகளில் வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் விசித்திரமான மற்றும் குழப்பமான முறையில் நடப்பதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது போதைப் பொருள் பயன்பாடு காரணமாகவே அவர் இவ்வாறு நடந்து கொண்டதாக நம்பப்படுகிறது.

நிபந்தனைகளின் அடிப்படையில் பிணை
இதனைத் தொடர்ந்து, பொதுவெளியில் ஆபாசமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதுடன், மேலதிக விசாரணைகள் முடியும் வரை அவர் சில நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தைக் நேரில் கண்டவர்கள் அல்லது அந்த நபரிடமிருந்து துஷ்பிரயோகத்தையோ அல்லது அசௌகரியத்தையோ எதிர்கொண்ட பொதுமக்கள் எவராயினும் உடனடியாகத் தங்களை அணுகித் தகவல் வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.