வாடகை வீட்டில் குஷ் ரக போதைப்பொருளை பயிரிட்டவர் கைது
அக்மீமன பகுதியில் வாடகைக்கு பெறப்பட்ட வீட்டில் குஷ் ரக போதைப்பொருளை பயிரிட்டு வந்த பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரை காலி மாவட்ட குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஜே.கே.பாயின் நண்பரிடமிருந்து கசிந்த அதிர்ச்சி ஓடியோ ; இஷாரா தொடர்பில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்
குறித்த வீட்டின் இரண்டு அறைகளில் அவர் அந்த போதைப்பொருளை பயிரிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்காக அவர் அந்த செடிகளை பயிரிட்டுள்ளதாக பொலிஸார் முன்னெடுத்த முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த வீடு கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு சொந்தமானது என்றும், சந்தேக நபர் வீட்டை வாடகைக்கு எடுத்து அதற்காக மாத வாடகையாக 1.5 இலட்சம் ரூபாவை செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜெயலத்தின் அறிவுறுத்தலின் பேரில், காலி மாவட்ட குற்றப்பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நாமல் பெரேரா முன்னெடுத்து வருகிறார்.