சாதி வெறியால் கர்ப்பிணி மருமகளை வெட்டிக்கொன்ற மாமனார்
இந்தியா தெலுங்கானாவில் மகன் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த தந்தை கர்ப்பிணி மருமகளை வெட்டிக்கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஜே.கே.பாயின் நண்பரிடமிருந்து கசிந்த அதிர்ச்சி ஓடியோ ; இஷாரா தொடர்பில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்
பீம் ஆசிபாபாத் மாவட்டத்தில் தாஹேகம் மண்டலத்தில் உள்ள கெர்ரே கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் BC சமூகத்தைச் சேர்ந்த இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ராணி என்ற பட்டியலின (ST) பெண்ணை காதலித்து மணந்தார்.
சேகரின் தந்தை சட்டையா அவர்களின் திருமணத்தை சிறிதும் விரும்பவில்லை. மகன் மற்றும் மருமகள் மீது அவர் வஞ்சத்துடன் இருந்து வந்துள்ளார்.
தற்போது ராணி ஒன்பது மாதக் கர்ப்பிணியாக இருந்த நிலையில், சட்டையாவின் சாதிவெறி இரத்த வெறியாக மாறியுள்ளது.
நேற்று (சனிக்கிழமை) கர்ப்பிணி மருமகளை அவர் இரக்கமின்றிக் கோடரியால் தாக்கினார்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த ராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ராணியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
மேலும் சட்டையாவை கைது செய்த காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.